Posts

பனை

Image
  அத்திசையில் ஒரு மரம்  வயல் காட்டின் பனைமரம் கொத்துக்கொத்தாய் குலைதள்ளி  வட்டுவரை காய்க்குமே ஊர்வாசலில் நின்றுபார்க்க  ஊர்வாசலில் எட்டுமே பழுத்த பனம் பழம் பொறுக்க  அடுத்தூரார் காத்திருப்பார் பொல்லாத கதைகட்டி அங்கு பேய்  உலாவுதென சொல்லிவச்சார். என் ஊரின் நரியர் அப்பா  அந்தப்பழம் பொறுக்கி சுவை கண்டார் ஆடுமாடு போனாலும் அது அடிக்கும்  என்று பக்குவமாய் கதை அளந்தார் வயல்காட்டில் விதைக்கையிலே  வரப்போறம் அடுப்பு வைச்சு கெண்டைமீன்,  கெழுத்திமீன் குஞ்சுத்திரழி பிடிச்சுவந்து அங்குதான் கூழாக்கி பனை ஓலை  பிளாக்கோலி பரிமாறினோம் ஒற்றைப்பனை கள் இறக்கி  கக்கத்தில் ஒழிச்சுவைத்து என் கூட்டுத்தோழருடன்  நாம் குடிச்சோம். தேன் அமிர்தம் தோற்றுவிடும் அந்த ஒற்றைப்பனை கதைபேசும். பல ஞாபகங்கள் மீண்டுவரும்  நாகதாழி பழம் பறிச்சு  நடுமுள்ளு கைகிழிக்க என் வீட்டில் அப்பம்மா  ஒப்பாரி வைப்பாள் என்று நாள் முழுக்க போகாமல்  பனை நிழலில்  படுத்திருந்த நினைவெல்லாம் ஞாபகம்  என் நண்...

காலங்களில் அவள் வசந்தம் .

காலம் ஒவ்வொருவருக்கும் ஒரு திருப்புமுனையாகிறது அது என்னையும் விட்டுவைக்கவில்லை அனுபவம் என்பது சொல்லிவருவதல்ல ,சொல்லும் செயலும் சேர்ந்த நாளந்த பாடம். அருவருக்க முடியாத ஆசை அவள் ஒருத்திதான் என் வாழ்க்கை கனவாகக்கூட மறக்ககூடாத காதல் அவள் என்னிலும் நான் அவளிலும் கொண்டது, நினைக்கும்போதெல்லாம் இதயம் இடம்மாறி துடிக்கிறது என் இதயமதில் இரு உயிரோசை கேட்கிறது நான் மறந்துவிடவில்லை அவளை இன்னும் இழந்துவிடவில்லை என்னை, தொலைபேசி மணியடித்தது சகுனம் பாராமல் வெகு நேரம் அழைத்தது வசதி கோராமல் சலிப்புத்தட்டியது சட்டென்று எடுத்தேன் துண்டித்தேன் மீண்டும் மறுகணம் அலறியது என் கைபேசி நான் அதை எடுப்பதற்குள் மவுனித்தது அது தகவல் சொல்லி வந்தது அதில் தொடர்பு கொள்ளும்படியாக நான் அசட்டையாக விட்டுவிட்டேன் என் வேலை என்பாடு என்று அந்நாள் பொழுது கழிந்தது கைபேசி என் நேரத்தை பிடித்துக்கொண்டதால் அதனை மவுனித்து வைத்திருந்தேன் என் வேலைகள் சற்று ஓய்ந்தபின் என் தொலைபேசியில் தவறவிட்ட அழைப்புகளை தேடிப்பார்த்தேன் தகவல் சொன்ன அழைப்பு இருதடவை வந்திருந்தது யாரெவரோ புரியவில்லை ஏன் அழைத்தார் தெரியவில்லை நான் அழைத்தேன் என் தொடர்பு துண்டி...

சுனாமி....

மதம் இனம் மொழி நிறம் என பாகுபாடு இன்றி சுருட்டிச் சென்றதே ஆழி அலை இதற்கு கட்டளையிட்டது யார்? பித்தா பிறைசூடி நீயா? கத்தா கருணைக் கடலே நீயா? புத்தா ஞானறிசியே நீ யா? அல்லா எல்லாம் ஆனவனே நீயா? எதற்காய் வாரிச் சுருட்டியது அலை இது இயற்கையை பழி சொல்லும் கொலை நீதித் தராசில் நிறுத்தவேண்டும் பரமனை ஒரு முறை.... அலையோடு அலை ஓடி ஆண்டுகள் பல ஆச்சு அடங்காத ஆத்மாக்கள் அளவின்றிப்போச்சு சிசு பாலன் பிறப்பே அனுகூலம் ஆச்சு மதவாத நம்பிக்கை மண்ணாய்ப் போச்சு தெய்வம் பிறப்பெடுத்த காலம் இன்றில்லை அதனால் இயற்கையும் அரக்கர் போலாச்சு நாளுக்கொரு செய்தியாய் காவு கொள்கிறது இயற்கை இதை காலம் பகைக்கிறதா? இல்லை கடவுள் பகைக்கிறதா? இயற்கை கடவுள் என்கிறார்கள்... அதை நாம் தான் பாதுகாக்க வேண்டும்.... கடவுள் குழந்தை வடிவம் என்கிறார்கள் அதையும் நாம் தான் பாதுகாக்க வேண்டும் ஆக மொத்தத்தில் கடவுள் யாரைப் பாதுகாக்கிறது? தன் உண்டியலையா? அது கூட இல்லை நம்பிக்கை தான் தெய்வம் என்றால் பார்க்கவும் பழகவும் பேசவும் பதில் சொல்லவும் தெரியாத இறைவனிடம் எதற்கு நம்பிக்கை?.... பார்த்து பழகுபவனிடம் பேசிக்கொள் பேச உகந்தவனிடம் நம்பிக்கை வை அ...

நம்பிக்கை

தேவன் பிறப்பிலே தேசம் அமைதிபெறாதோ? ஓலம் எனும் அவலம் நின்றொழியாதோ? பாவம் பழி தீர்க்க மீட்பர் வருவாரோ?  காலப்பெருவெளியில் யாராரோ வருகிறார் ஏதேதோ புரிகிறார்.  யாதேனும் ஓருவர் எம் கண்ணீர் துடையாரோ? ஆவல் கொண்டோம் அது ஆற்றாமல் போகிறதே.  காலமே உனக்கும் எமக்கும் விரோதப் பகை உண்டோ? எதற்கு எம்மை சோதிக்கின்றாய்? நாம் இழந்ததைச் சொல்லவா? இருப்பதைச் சொல்லவா? எமைக்கண்டு வருந்தும் நிலையாக இயற்கைகூட இல்லை மதங்களும் தம் மத தத்துவத்தை மறந்து நிற்கின்றன இதில் தேவன் மகிமை என்பது குதிரைப் பந்தயத்து சீட்டு, பணம் போல் வரலாம் வராமலும் போகலாம், ஏன் என்றால் உன் தட்சனை எவ்வளவோ அவ்வளவே அதன் பரி வர்த்தனையும்  மனசாட்சி இல்லாமல் மத ஆட்சி, அதில் யார் முளைத்தென்ன வெறும் காட்சிப் பொருள்தான் மனித நேயமும் மனசாட்சியும் அழிந்துதான் போகும் மனங்களே மதங்களை வதம் செய்யுங்கள் அப்பொழுதுதான் இறைவன் மனிதனை இச்சிப்பான் அது வரை உங்கள் அறியாமை கண்டு அவன் அறியாமல் இருப்பான் இறைவன் வருகை தேதி குறிப்பிடப்பட வில்லை இவர் தான் இறைவன் என்று கொள்வதும் இல்லை. இங்கு எவர் வந்தால் என்ன? நாம் இங்கு நாமாக இல்லாதபோது....

தை....

மாதம் பண்ணிரெண்டில் மகவு பெற்றாள் மார்கழி காலம் கனிந்து வளங்கள் குவிந்திட பிறந்தது தை மாசிக்கு தாய் பங்குனிக்கு பேத்தி எங்கும் வளம் நிறைத்து திங்கள் முதல் நாளில் எங்கள் திருநாள்... ஆண்டின் பிறப்பு ஐஸ்வரியத்தின் முனைப்பு... அலக்களித்த நாள் மறைந்து பூ துளிக்கும் மாதம் தை.... ஏரும் எருதும் விடிகாலைக்கதிரவனும் காலப்பழு நீக்கி கோலமயில் ஆடும்... சாலப்பெருவெள்ள காமதேனு போதும் எனும் சொல்லே குறை தீர்க்கும் குடமாகும், அதைப்புகழ் பாடும் பொங்கல் திரு நாள் தமிழர் எம் பெருநாள் நெஞ்சப் பெருவெள்ளம் பொங்கட்டும் எங்கும் புது இன்பம்... புதியவை வரவளைத்து பழையவை ஒயவிட்டு இனியவை கூட்டுச்சேர்த்து எழியவை காணட்டும் இந்நாள் எண்ணத்தில் நிம்மதி ஏற்றத்தில் வான்மதி வாழ்க்கையில் முழுமதி ஆகட்டும் இந்நாள்.... எதிரிக்கும் இரங்கி பகைவர்க்கும் உருகி காலத்தை கணிப்போம் வேதத்தை அறிந்து வேண்டுதல் புரிந்து கொடும் சாபத்தை அழிப்போம் வயலும் வரப்பும் மழையில் உயர்க குடியும் கோணும் உழைப்பில் உயர்க... நற்பும் பண்பும் குறைவிலா உயர்க, நாம் ஓர் குடி என நித்திலம் உயர்க, சாதிகள் சமயங்கள் சாய்த்து நாம் உயர்க, வாதை இன்னல்கள் மறந்...

சித்திரமே....!

சித்திரமே உன் அழகை சித்தரிக்கவோ கற்பனையில் வான் அளந்து கவி செதுக்கவோ ஒப்பனைக்கு என் தமிழ் தற்பொழுதுமோ முத்தமிழ் முத்தமிடும் பெட்டகமே. உன் பக்கம் வர வெட்கப்படும் எழில் உச்சம் என சித்தரித்த சிற்பம் எல்லாம் கற்பனைகள் கூட்டுச்சேர்ந்த புத்தகம் -நீ. திருவள்ளுவனின் குரல் வரியின் பால்குடம் நீ . நான்  மொண்டெடுத்து ரசம் கழித்த முத்தமிழ் நீ என் கற்பனைகள் அலைமோதும் பாற்கடல் நீ நான் நித்தம் நின்று ஆடுகின்றேன்.  உன் ரகசியங்கள் தேடடுகிறேன். என்னை காகிதத்து ஓடமாக்கி உனக்குள்ளே புதைத்துவிட்டாய். என் முகவரி நீ ஆனாய்

எம் தேசம்

நந்திக்கரை ஓரம் மின்மினி ஒன்று வெளிச்சம் காட்டியது விருட்சம் விருட்சம் விடுதலையின் வெளிச்சம் என்கிறது எரிவண்டு பாவம் அது பொறி என்று தெரியாமல் தறி தட்டிக்கிடக்கிறது தனக்கான அடையாளத்தை அதற்கான அதிகாரத்தை இரவோடு இறவாய் எரித்துக் கொள்ளப்பார்கிறது சில சதிகாரவர்க்கம் நிலம் இருந்தபோது மரம் இல்லை, மரம் இருந்தபோது கிளை இல்லை, கிளை இருந்தபோது இலை இல்லை, இலை இருந்தபோது நிழல் இல்லை, நிழலே நீ நிஐம் இல்லை என்றபோது மின்மினி என்ன ஆயிரம் கதிரவன் கிழக்கே முளைத்தாலும் இது என் தாய் நிலம் என்பது மனதில் முளைக்காமல் பெரும் விருட்ச்சத்துக்கிடமில்லை, அதை விதைக்கவும் வழியில்லை பதம் இழந்த தரை கள்ளியும் முளைக்கும் காரையும் முளைக்கும், அதை சொந்தம் கொள்ள யாருக்குரிமை  நம்பிக்கெடாதீர்கள் நாயும் ஊழையிடும், கள்ளியிலும் பால் வடியும்.  பாம்பும் தேளும் ஓர் ஜாதி, பருந்தும் கழுகும் ஓர் ஜாதி. அரசும் அவன் அரக்கனும் அவன் இரக்கம் கிடையாது உனக்கு