நம்பிக்கை
தேவன் பிறப்பிலே
தேசம் அமைதிபெறாதோ?
ஓலம் எனும் அவலம்
நின்றொழியாதோ?
பாவம் பழி தீர்க்க மீட்பர் வருவாரோ?
காலப்பெருவெளியில்
யாராரோ வருகிறார் ஏதேதோ புரிகிறார்.
யாதேனும் ஓருவர்
எம் கண்ணீர் துடையாரோ?
ஆவல் கொண்டோம் அது ஆற்றாமல் போகிறதே.
காலமே உனக்கும் எமக்கும்
விரோதப் பகை உண்டோ?
எதற்கு எம்மை சோதிக்கின்றாய்?
நாம் இழந்ததைச் சொல்லவா?
இருப்பதைச் சொல்லவா?
எமைக்கண்டு வருந்தும்
நிலையாக இயற்கைகூட இல்லை
மதங்களும் தம் மத
தத்துவத்தை மறந்து நிற்கின்றன
இதில் தேவன் மகிமை
என்பது குதிரைப் பந்தயத்து சீட்டு,
பணம் போல் வரலாம் வராமலும் போகலாம்,
ஏன் என்றால் உன் தட்சனை எவ்வளவோ
அவ்வளவே அதன் பரி வர்த்தனையும்
மனசாட்சி இல்லாமல் மத ஆட்சி,
அதில் யார் முளைத்தென்ன
வெறும் காட்சிப் பொருள்தான்
மனித நேயமும் மனசாட்சியும்
அழிந்துதான் போகும்
மனங்களே மதங்களை வதம் செய்யுங்கள்
அப்பொழுதுதான் இறைவன்
மனிதனை இச்சிப்பான்
அது வரை உங்கள் அறியாமை கண்டு
அவன் அறியாமல் இருப்பான்
இறைவன் வருகை தேதி
குறிப்பிடப்பட வில்லை
இவர் தான் இறைவன் என்று கொள்வதும் இல்லை.
இங்கு எவர் வந்தால் என்ன?
நாம் இங்கு நாமாக இல்லாதபோது....
தேசம் அமைதிபெறாதோ?
ஓலம் எனும் அவலம்
நின்றொழியாதோ?
பாவம் பழி தீர்க்க மீட்பர் வருவாரோ?
காலப்பெருவெளியில்
யாராரோ வருகிறார் ஏதேதோ புரிகிறார்.
யாதேனும் ஓருவர்
எம் கண்ணீர் துடையாரோ?
ஆவல் கொண்டோம் அது ஆற்றாமல் போகிறதே.
காலமே உனக்கும் எமக்கும்
விரோதப் பகை உண்டோ?
எதற்கு எம்மை சோதிக்கின்றாய்?
நாம் இழந்ததைச் சொல்லவா?
இருப்பதைச் சொல்லவா?
எமைக்கண்டு வருந்தும்
நிலையாக இயற்கைகூட இல்லை
மதங்களும் தம் மத
தத்துவத்தை மறந்து நிற்கின்றன
இதில் தேவன் மகிமை
என்பது குதிரைப் பந்தயத்து சீட்டு,
பணம் போல் வரலாம் வராமலும் போகலாம்,
ஏன் என்றால் உன் தட்சனை எவ்வளவோ
அவ்வளவே அதன் பரி வர்த்தனையும்
மனசாட்சி இல்லாமல் மத ஆட்சி,
அதில் யார் முளைத்தென்ன
வெறும் காட்சிப் பொருள்தான்
மனித நேயமும் மனசாட்சியும்
அழிந்துதான் போகும்
மனங்களே மதங்களை வதம் செய்யுங்கள்
அப்பொழுதுதான் இறைவன்
மனிதனை இச்சிப்பான்
அது வரை உங்கள் அறியாமை கண்டு
அவன் அறியாமல் இருப்பான்
இறைவன் வருகை தேதி
குறிப்பிடப்பட வில்லை
இவர் தான் இறைவன் என்று கொள்வதும் இல்லை.
இங்கு எவர் வந்தால் என்ன?
நாம் இங்கு நாமாக இல்லாதபோது....
Comments
Post a Comment