தை....
மாதம் பண்ணிரெண்டில் மகவு
பெற்றாள் மார்கழி
காலம் கனிந்து வளங்கள்
குவிந்திட பிறந்தது தை
மாசிக்கு தாய் பங்குனிக்கு பேத்தி
எங்கும் வளம் நிறைத்து
திங்கள் முதல் நாளில் எங்கள் திருநாள்...
ஆண்டின் பிறப்பு
ஐஸ்வரியத்தின் முனைப்பு...
அலக்களித்த நாள் மறைந்து
பூ துளிக்கும் மாதம் தை....
ஏரும் எருதும் விடிகாலைக்கதிரவனும்
காலப்பழு நீக்கி கோலமயில் ஆடும்...
சாலப்பெருவெள்ள காமதேனு
போதும் எனும் சொல்லே
குறை தீர்க்கும் குடமாகும்,
அதைப்புகழ் பாடும் பொங்கல் திரு நாள்
தமிழர் எம் பெருநாள்
நெஞ்சப் பெருவெள்ளம்
பொங்கட்டும் எங்கும் புது இன்பம்...
புதியவை வரவளைத்து
பழையவை ஒயவிட்டு
இனியவை கூட்டுச்சேர்த்து
எழியவை காணட்டும் இந்நாள்
எண்ணத்தில் நிம்மதி ஏற்றத்தில் வான்மதி
வாழ்க்கையில் முழுமதி ஆகட்டும் இந்நாள்....
எதிரிக்கும் இரங்கி பகைவர்க்கும்
உருகி காலத்தை கணிப்போம்
வேதத்தை அறிந்து வேண்டுதல்
புரிந்து கொடும் சாபத்தை அழிப்போம்
வயலும் வரப்பும் மழையில் உயர்க
குடியும் கோணும் உழைப்பில் உயர்க...
நற்பும் பண்பும் குறைவிலா உயர்க,
நாம் ஓர் குடி என நித்திலம் உயர்க,
சாதிகள் சமயங்கள் சாய்த்து நாம் உயர்க,
வாதை இன்னல்கள் மறந்து நாம் உயர்க,
வாழும் இந்நாளே இனிதென உயர்க,
யார்க்கும் ஒன்றாகி ஒருவர்பால் அன்பாகி
தூற்றும் மனம் அருகி பூக்கட்டும் புத்தாண்டு
வாழ்த்துவோம் நாம் ஒன்றிணைந்து வாழ்க வாழ்க.....
பெற்றாள் மார்கழி
காலம் கனிந்து வளங்கள்
குவிந்திட பிறந்தது தை
மாசிக்கு தாய் பங்குனிக்கு பேத்தி
எங்கும் வளம் நிறைத்து
திங்கள் முதல் நாளில் எங்கள் திருநாள்...
ஆண்டின் பிறப்பு
ஐஸ்வரியத்தின் முனைப்பு...
அலக்களித்த நாள் மறைந்து
பூ துளிக்கும் மாதம் தை....
ஏரும் எருதும் விடிகாலைக்கதிரவனும்
காலப்பழு நீக்கி கோலமயில் ஆடும்...
சாலப்பெருவெள்ள காமதேனு
போதும் எனும் சொல்லே
குறை தீர்க்கும் குடமாகும்,
அதைப்புகழ் பாடும் பொங்கல் திரு நாள்
தமிழர் எம் பெருநாள்
நெஞ்சப் பெருவெள்ளம்
பொங்கட்டும் எங்கும் புது இன்பம்...
புதியவை வரவளைத்து
பழையவை ஒயவிட்டு
இனியவை கூட்டுச்சேர்த்து
எழியவை காணட்டும் இந்நாள்
எண்ணத்தில் நிம்மதி ஏற்றத்தில் வான்மதி
வாழ்க்கையில் முழுமதி ஆகட்டும் இந்நாள்....
எதிரிக்கும் இரங்கி பகைவர்க்கும்
உருகி காலத்தை கணிப்போம்
வேதத்தை அறிந்து வேண்டுதல்
புரிந்து கொடும் சாபத்தை அழிப்போம்
வயலும் வரப்பும் மழையில் உயர்க
குடியும் கோணும் உழைப்பில் உயர்க...
நற்பும் பண்பும் குறைவிலா உயர்க,
நாம் ஓர் குடி என நித்திலம் உயர்க,
சாதிகள் சமயங்கள் சாய்த்து நாம் உயர்க,
வாதை இன்னல்கள் மறந்து நாம் உயர்க,
வாழும் இந்நாளே இனிதென உயர்க,
யார்க்கும் ஒன்றாகி ஒருவர்பால் அன்பாகி
தூற்றும் மனம் அருகி பூக்கட்டும் புத்தாண்டு
வாழ்த்துவோம் நாம் ஒன்றிணைந்து வாழ்க வாழ்க.....
Comments
Post a Comment