எம் தேசம்
நந்திக்கரை ஓரம்
மின்மினி ஒன்று
வெளிச்சம் காட்டியது
விருட்சம் விருட்சம்
விடுதலையின் வெளிச்சம் என்கிறது
எரிவண்டு பாவம் அது
பொறி என்று தெரியாமல்
தறி தட்டிக்கிடக்கிறது
தனக்கான அடையாளத்தை
அதற்கான அதிகாரத்தை
இரவோடு இறவாய் எரித்துக்
கொள்ளப்பார்கிறது சில சதிகாரவர்க்கம்
நிலம் இருந்தபோது மரம் இல்லை,
மரம் இருந்தபோது கிளை இல்லை,
கிளை இருந்தபோது இலை இல்லை,
இலை இருந்தபோது நிழல் இல்லை,
நிழலே நீ நிஐம் இல்லை என்றபோது
மின்மினி என்ன ஆயிரம்
கதிரவன் கிழக்கே முளைத்தாலும்
இது என் தாய் நிலம் என்பது மனதில் முளைக்காமல்
பெரும் விருட்ச்சத்துக்கிடமில்லை,
அதை விதைக்கவும் வழியில்லை
பதம் இழந்த தரை கள்ளியும் முளைக்கும்
காரையும் முளைக்கும்,
அதை சொந்தம் கொள்ள யாருக்குரிமை
நம்பிக்கெடாதீர்கள் நாயும் ஊழையிடும்,
கள்ளியிலும் பால் வடியும்.
பாம்பும் தேளும் ஓர் ஜாதி,
பருந்தும் கழுகும் ஓர் ஜாதி.
அரசும் அவன் அரக்கனும் அவன்
இரக்கம் கிடையாது உனக்கு
மின்மினி ஒன்று
வெளிச்சம் காட்டியது
விருட்சம் விருட்சம்
விடுதலையின் வெளிச்சம் என்கிறது
எரிவண்டு பாவம் அது
பொறி என்று தெரியாமல்
தறி தட்டிக்கிடக்கிறது
தனக்கான அடையாளத்தை
அதற்கான அதிகாரத்தை
இரவோடு இறவாய் எரித்துக்
கொள்ளப்பார்கிறது சில சதிகாரவர்க்கம்
நிலம் இருந்தபோது மரம் இல்லை,
மரம் இருந்தபோது கிளை இல்லை,
கிளை இருந்தபோது இலை இல்லை,
இலை இருந்தபோது நிழல் இல்லை,
நிழலே நீ நிஐம் இல்லை என்றபோது
மின்மினி என்ன ஆயிரம்
கதிரவன் கிழக்கே முளைத்தாலும்
இது என் தாய் நிலம் என்பது மனதில் முளைக்காமல்
பெரும் விருட்ச்சத்துக்கிடமில்லை,
அதை விதைக்கவும் வழியில்லை
பதம் இழந்த தரை கள்ளியும் முளைக்கும்
காரையும் முளைக்கும்,
அதை சொந்தம் கொள்ள யாருக்குரிமை
நம்பிக்கெடாதீர்கள் நாயும் ஊழையிடும்,
கள்ளியிலும் பால் வடியும்.
பாம்பும் தேளும் ஓர் ஜாதி,
பருந்தும் கழுகும் ஓர் ஜாதி.
அரசும் அவன் அரக்கனும் அவன்
இரக்கம் கிடையாது உனக்கு
Comments
Post a Comment