சித்திரமே....!

சித்திரமே உன் அழகை
சித்தரிக்கவோ
கற்பனையில் வான்
அளந்து கவி செதுக்கவோ
ஒப்பனைக்கு என் தமிழ் தற்பொழுதுமோ
முத்தமிழ் முத்தமிடும் பெட்டகமே.
உன் பக்கம் வர வெட்கப்படும் எழில் உச்சம்
என சித்தரித்த சிற்பம் எல்லாம்
கற்பனைகள் கூட்டுச்சேர்ந்த புத்தகம் -நீ.
திருவள்ளுவனின் குரல் வரியின் பால்குடம் நீ .
நான்  மொண்டெடுத்து ரசம் கழித்த முத்தமிழ் நீ
என் கற்பனைகள் அலைமோதும் பாற்கடல் நீ
நான் நித்தம் நின்று ஆடுகின்றேன்.
 உன் ரகசியங்கள் தேடடுகிறேன்.
என்னை காகிதத்து ஓடமாக்கி
உனக்குள்ளே புதைத்துவிட்டாய்.
என் முகவரி நீ ஆனாய்

Comments

Popular posts from this blog

எம் தேசம்

தேடுகிறேன் (ஆதவன் )

பனை