சுனாமி....

மதம் இனம் மொழி
நிறம் என பாகுபாடு இன்றி
சுருட்டிச் சென்றதே ஆழி அலை
இதற்கு கட்டளையிட்டது யார்?
பித்தா பிறைசூடி நீயா?
கத்தா கருணைக் கடலே நீயா?
புத்தா ஞானறிசியே நீ யா?
அல்லா எல்லாம் ஆனவனே நீயா?
எதற்காய் வாரிச் சுருட்டியது அலை
இது இயற்கையை பழி சொல்லும் கொலை
நீதித் தராசில் நிறுத்தவேண்டும் பரமனை ஒரு முறை....
அலையோடு அலை ஓடி ஆண்டுகள் பல ஆச்சு
அடங்காத ஆத்மாக்கள் அளவின்றிப்போச்சு
சிசு பாலன் பிறப்பே அனுகூலம் ஆச்சு
மதவாத நம்பிக்கை மண்ணாய்ப் போச்சு
தெய்வம் பிறப்பெடுத்த காலம் இன்றில்லை
அதனால் இயற்கையும் அரக்கர் போலாச்சு
நாளுக்கொரு செய்தியாய் காவு கொள்கிறது இயற்கை
இதை காலம் பகைக்கிறதா?
இல்லை கடவுள் பகைக்கிறதா?
இயற்கை கடவுள் என்கிறார்கள்...
அதை நாம் தான் பாதுகாக்க வேண்டும்....
கடவுள் குழந்தை வடிவம் என்கிறார்கள்
அதையும் நாம் தான் பாதுகாக்க வேண்டும்
ஆக மொத்தத்தில் கடவுள் யாரைப் பாதுகாக்கிறது?
தன் உண்டியலையா? அது கூட இல்லை
நம்பிக்கை தான் தெய்வம் என்றால்
பார்க்கவும் பழகவும் பேசவும் பதில் சொல்லவும்
தெரியாத இறைவனிடம் எதற்கு நம்பிக்கை?....
பார்த்து பழகுபவனிடம் பேசிக்கொள்
பேச உகந்தவனிடம் நம்பிக்கை வை அவன் தான் கை கொடுப்பான்
அவன்தான் தெய்வத்துக்கு மேலானவன்
எம் அறநூலும் இதையே சொல்லும்
மன வழிப் சார்ந்தது தெய்வம்
மனித வழி சார்ந்து தான் அதன் உருவம்
விடை வேறு விளக்கம் வேறு
இதை புரிந்து கொண்டால் நீ மனிதன்....

Comments

Popular posts from this blog

எம் தேசம்

தேடுகிறேன் (ஆதவன் )

பனை