தேடுகிறேன் பார்க்க கிடைப்பாளா?
காற்றே நீ கண்டாயா ?
நிலவே நீ பார்த்தாயா?
பூவே நீ உணர்ந்தாயா ?
பொழுதே நீ அறிவாயா ?
மேகங்கள் விடைதருமா ?
என் பூங்கொடியாள் நலம்தானா ?
என் பள்ளியில் மயிலானாள்
என் பார்வைக்கு மானானாள்
எனக்குள் உயிரானாள்
என் கவிதைக்கு அவளானாள்
கண்டாயா வெண்ணிலவே
இந்த பாருக்குள் அவள் எங்கே
புன்னகையில் பூவரும்பும்
புத்தனுக்கும் கவி பிறக்கும்
அவள்கன்னத்துகுழியழகில் எழுதி தீர்ந்தது என்பேனாமை
தீட்ட முகவரியின்றி குவிந்து கிடக்கிறது கவிதைத்துளி
தேடிச் சேர்ப்பாயா ஆடிக்காற்றே!
ராகம் அவள் பெயர்
கீதம் அவள் வார்த்தை
சாரீரம் அவள் உடல்
ஜதி சொல்லும் அவள் நடை
தமிழுக்கு அவள் கவி
பூவுக்குள் அவள் ஓர் இனம்
அந்த பூங்கோதை எங்கே!
பாடப்பள்ளியும் படித்த புத்தகமும்
படித்த பக்கத்தில் அவள் பெயர் இன்னும் நினைவில்
தேடுகிறேன் நினைவுகளை .........
சித்திரமும் சிற்பங்களும் சிலிர்த்து நிற்கும்
ஒப்பனையில் வெண்ணிலவு தேய்ந்து மறையும்
ஓடி வந்து ஒட்டிக்கொண்டு காற்று கரையும்
தேடிவந்து மேகமெல்லாம் கூடி குவியும்
தொட்டுக்கொள்ள முட்டிக்கொண்டு வானம் பொழியும்
தாகம் தீர்த்து மோகம் காட்டி வானவில் விரியும்
வானம்பார்க்க மின்னல்தெறித்து மேகம் கலையும்
விண்மீனெல்லாம் கண்ணில் ஒத்த கூடி சொரியும்
கொஞ்சிபேச கோவைக்கிளி கெஞ்சி கேட்கும்
மஞ்சல்பூசி மாலைப்பொழுது நாணி கருகும்
அவள்கண்கள் பார்த்து காதல்கொண்டு கவிதை புனைந்தேன்
மை இட்ட கண்களால் பேசுவாள்
மனம்விட்டு பேச நான் ஏங்குவேன்
மல்லிகை பூவினை சூடுவாள்
என் மனம் கொய்து என்னை வாட்டுவாள்
புன்னகையில் பூவிரிப்பாள்
பூவிதழால் மலர்ந்திருப்பாள்
கண்ணிமைக்குள் பதித்து வைத்தேன்
காலமெல்லாம் சுமந்து வந்தேன்
என்மனதை உடைத்தெறிந்து அவள் நினைவை தேடுகிறேன்.
Comments
Post a Comment