கோகுலத்தில் ஒரு கீதம்

 கோகுலத்தில் ஒரு கீதம் 

புல்லாங்குழல் புகு காற்று,
என் செவிப்பறைதட்டுது இசை மீட்டு.
சொல்லால் எழுதிய பாட்டு 
அதை சொல்லிப்படிக்குது குழல் காற்று.
கோகுலத்தில் ஒரு கோதை சூடநின்றால் மாலை,
 வாடியதோ அவள் பார்வை கூடவும் அந்த மாலை. 
மாலவன் அவன் எங்கே எனத்தேடுதே குழல் காற்று ,
மாயவா நீ எங்கே மாலை சூடவா நான் இங்கே,
 கீதையைத் தந்தாய் கீர்த்தனை சொன்னாய்,
என் வேதனை தீரமுன் வேடிக்கை செய்தாய்,
பார் எனை யார் துணை நீ இன்றி 
பார்ப்பதும் கேட்பதும்  நிஐம் இல்லை உன்னால்,
வா என்பேன் வந்துவிடு நான் என்னைத்தந்துவிட .
உன் குழலில் உருகினேன் 
கொடிஎன வளைகிறேன்,
என் வளையல்கள் அவிழ்ந்தன மறைந்தன,
எனை மீட்டிடு குழல் என என் நவரச துளைகளில்,
 முகுந்தா நீ மருந்தா விருந்தா . 
என் ஜீவன் புசிக்கும் அருந்தல் விருந்தா,
நீ வந்தால் தரிக்கும் ஜீவன் எனக்குள். 
மறந்தால் மரிப்பேன் மோட்சம் எடுப்பேன். 
வருவாயோ என் குரல்கேட்டு தருவாயோ உன்
குழல் பாட்டு..

Comments

Popular posts from this blog

எம் தேசம்

தேடுகிறேன் (ஆதவன் )

பனை