நிலவும் மதியும்.
துவளும் மனம்
துடிக்கும் தினம்
தூயவளே உன்னை
துருவமாய் எண்ணி
தூங்காமல்
துதிபாடும் தூயவன் நான்
துளசிப்பூவே
துறந்துபார் நெஞ்சை
தூசித்துவளாய்
துவழ்ந்து கிடக்கும்
உன்
துருப்பிடித்த நினைவு
தூறல் தந்து
துவட்டிவிடு
தூது சொல்லி
தூங்கவிடு
தூதுக்கு தூதை
தூதர்தான் யாரோ?
தூரத்து நிலவை
துருவிப்பார்த்தேன்
தூறல் மழையில்
துலவிப்பார்த்தேன்
தூசிமேகம்
துலக்கிப்பார்த்தேன்
தூய்மை துவண்டு
கிடக்கு
தூரத்து நிலவும்
நான்துணைகொண்ட மதியும்
நேருக்கு நேர் இனி
புவிக்கு இல்லை
அமாவாசை இரவு .....................................................
Comments
Post a Comment