சிந்தனை சிதறல்கள்

>உனக்காய் உழைத்தால் வலி மட்டும் மிஞ்சும் ஊருக்கும் சேர்த்து உழை கோட்டையிலே உன் கொடி பறக்கும் .
>உடல் ஆறினால் நித்திரை உயிர் ஆறினால் மரணம் ஆறலை அளவுபடுத்து .
>இரவின் நித்திரை கால வகுப்பின் மரணத்திற்கு ஒத்திகை .
>என்னை நான் அறிந்து கொண்டதும் காதல் ,என்னை நான் மறந்து கொண்டதும் காதல் ,என்னை நான் மாய்த்துகொள்வதும் காதல் அளவற்ற காதல் உன்னை அழவிட்டுப்பார்க்கும் .
>இறைவன் மனிதனுக்கென்று வழிவகுத்தான் அதை மனிதன் விதியென்று விலங்கிட்டான் ,வாழ்வில் நொந்துவிட்டால் விதி என்பான் அதில் அவன் வென்றுவிட்டால் மதி என்பான் இவற்றுக்குள் அகப்படாதவன் எவனோ அவனே புண்ணியவான் .
>கனவுகளால் வாழ்க்கை கழிந்துவிட்டால் நினைவுகளும் நிலைத்துவிடும் ,நினைத்ததும் வாழ்வில் கிடைத்துவிட்டால் இறைமை பொய்த்துவிடும் .
>உன்னை நீ நம்பு நம்பாவிடில் நீ நம்பும் இறைவனுக்கு சக்தியில்லை .
>உழைப்பதற்காய் வாழ்ந்துவிட்டால் வாழ்க்கை தொலைந்து போகும் ,நாளையென்று ஒதுக்கி வைத்தால் இந்நாள் இருண்டு போகும்.
>கொண்டவனை கை கொள் என்பது பைபிளின் வாக்கியம் அவர்தம் முந்தானை வீழ் என்பது தம் எண்ணத்து ஓவியமாம்  நான் இலக்கிய காலத்தில் சிறைப்பட்டவன் என் உணர்வுகள்கூட  அதில் அகப்பட்டது என் மோகமும் மேகமாய் அலைகின்றது .
>ஊழ்வினையால் வீழ்ந்தோர்க்கும் விமோசனமுண்டு பெண்வினையால் வீழ்ந்தோர்க்கு எப்பிறப்பிலும் மோட்சமில்லை.
>அன்புக்கு அன்பென்னும் அகத்தின்பாலெண்ணம் கொண்டோர்க்கு முகத்தில் புன்னகை புதுப்பொலிவு என்றும் நீடித்திருக்கும் .
>மறையான் மறை முறையாய் நாளும் உரைப்பார் மறுவினை உறைந்த வினையாயின் கரைந்து போகும் .
>விதைக்குள் இருக்கும் விருட்சம் தன்னை முளையில் சொல்ல முடியும் தலை நரைத்தும் மனிதன் மனதில் முளைக்கும் கருவை யாரால் சொல்ல முடியும் .
>விதியை சாடாதே மதியால் வென்றுகொள் கிடைப்பதெல்லாம் இறைவன் வந்தனம் அதை அன்பால் அணைத்துக்கொள் இடியும் வெண்பனியாய் விழும் .
>எல்லாம் பெண் எண்ணப்படி விடாதே உன்னை திண்ணை படியாக்கி ஏறி மிதிப்பாள்.
>இறைவன்  விரும்புவதை மனிதன் விரும்புவதில்லை மனிதன் விரும்புவதை இறைவன் விரும்புவதில்லை இதற்கு மதியும் விதியும் பொறுப்பல்ல மூட நம்பிக்கையே பொறுப்பு
>உன் மனதை கட்டுப்படுத்து உன்னோடு நீ உரையாடு உனக்கு உன் குறை தெரியும் .
>குறையில்லா மனிதன் மன நிறைவின்றி வாழ்கின்றான் மன நிறைவில்லாத மனிதன் குறைசொல்லி வாழ்கிறான் .
>இது உனக்கென்கிறாய் இன்னொருவன் தனக்கென்று வாழ்கிறான் இதை நீ மறுக்க முடியுமா
>நம்பிக்கை உரமிடு உழவனோடு உடன்படு தோழமை பயிரிடு உலகமே உயிர்பெறும்
>இதயம் உருகாமல் காதல் கனியாது காதல் கனியாது வாழ்க்கை இனியாது  வாழ்க்கை இனியாது வாழ்வு நகராது வாழ்வு நகராது வசந்தம் வீசாது .
>பண்பட்ட மண்ணில் விதைவிழும் பயிரிற்கு பயன் பல பத்து முளை விடும் .
>நம்பிக்கை நங்கூரமிடு எவன் உன்னை ஏளனம் செய்தானோ அவன் முன் நீ போற்றப்படுவாய்
>மதம் என்பது உன் மூக்குக்கண்ணாடி போல மங்கிய உன் பார்வைக்கு அது அறம் நெறி கூட்டுகின்றது .
>அன்பிருக்கும் இதயமெல்லாம் இறைவன் குடியிருக்கும்  ஆலயம்
>இல்லாமையை கண்டு வருந்தாதே முயலாமல் நின்று புலம்பாதே முடியாது என்று நினையாதே .
>இறைமையை தேடு மதம் என்ற பேயை இனம் கண்டு அழி .
>இல்லாமை என்ற சொல் இல்லாது போக எல்லோர்க்கும் ஒன்றான சமத்துவம் வேண்டும் .
>மனம் தேர்ந்தெடுக்கும் காதல் என்றும் மலர்ந்திருக்கும் வயசுப்பசி வந்தால் பருவத்தில் கோளாறு பருவமே தவறிவிட்டால் வாழ்க்கையில் கோளாறு.
>இறைவன் உன்னோடு இருக்கிறான் என்பதில் திடம்கொள் நீ செய்யும் செயல்கள் அனைத்திற்கும் அவன் பக்க துணையாக இருப்பான் .
>உள்ளத்தில் புதைத்து வைக்கும் எண்ணமது வண்ணமாய் முகத்தில் பூத்து நிற்கும் .
>இறைவனை வேறுபடுத்தி மதங்களை வளர்க்காதே மாயையை கண்ணில் ஒற்றி உண்மையை சிதைக்காதே .
> இல்லறம் தன்னிலே நல்லறம் காண்பவன் இந்த நாநிலம் உய்திட வழிசமைப்பான் .
>பெண் புன்னகைக்கு மயங்கினால் உன்னகத்தில் தன்னலத்தை விரும்புவாள் கண்ணீரை கேடயமாக்கி உன் தோளில் தூழிகட்டி ஆடுவாள்  காதலை படிக்கல்லாக்கி காரிய நீரள்ளி குளித்து நீராடுவாள் .
>உன் மனதை கேட்டு நட மற்றோர் மார்பில் உதையாதே .
>விதிப்படி என்று நினையாதே உன் வினை விதியை மாற்றியமைக்கிறது.
>நேற்றைய உலகம் என்ன செய்ததென்ற உன் கேள்விக்கு நாளைய உலகிற்கு நீ விட்டுச்செல்வதென்ன .
>கடமை என்பதை கனிவோடு செய் காலம் உன்னை கைகூப்பும் .
>கொடுத்தை அளவிடாதே பலன் மடைதிறந்து பெருக்கெடுக்கும் .
>விதி என்பதை எதுவரை நம்புகிறாய் மதி என்பது உன் மனதிற்கு எட்டும்வரை .>எண்ணம் குருடானால் பார்வை என்பது முடமாகும் .











Comments

Popular posts from this blog

எம் தேசம்

தேடுகிறேன் (ஆதவன் )

பனை