காதல் .


கண்கள் விரிக்கும் வலைக்குள் உள்ளம் வந்து மாட்டிக்கொள்கிறதே அது காதல்.
காதல் விதி விலக்குகளுக்கு கட்டுப்படாதது நியாயம் தர்மம் தெரியாதது .
உயர்வெது தாழ்வெது புரியாதது ,
அறிந்து நடப்பவன் அறியாது கொள்வது காதல் ,
அரட்டை பண்ணி அடிசறுக்கேன் என்று சொல்வோர்
குருட்டுத்தனமாய் அடி பணிந்துகிடப்பதும் காதல் ,
ஏன் கருவண்டுக்கும் காதல் வரும் ,
காதலிலே போதை வரும் அந்த போதைதனை நீ அறிவாய் ,
காதல் ஜீவப்பசி மோகப்பசியாகி காமப்பசி கொள்கிறது
ஜீவ ஆத்துமா உணர்வை தீண்டுகிறது
உணர்வோ உடலை தீண்டுகிறது ,
உடலோ உறவை தேடுகிறது அந்த தேடலில் ஆத்மா சங்கமமாகி ஒரு சந்ததியை தருகிறது ,
காதல் தவிர்க்க முடியாததல்ல மறுக்க முடியாததொன்று ,
எவ்வண்ணம் விதை விழும்  எவ்வண்ணம் முளைவிடும் என்ற காரணம் சொல்ல முடியாது ,
காற்றோடு காதல் சுவாசத்தில் நுழைகிறது எப்போது மனதில் வேரூன்றுகிறதோ அப்போது காதல் வெளிப்படையாகிறது ,
இதயங்கள் இடம்மாறும்பொழுது இடைவெளி குறைகிறது
ஒரே சுவாசத்தில் இரு ஜீவன்கள் ஊசலாடும் ,
பிரிவென்று ஓடிகின்ற இதழ் மரணத்திலும் கொடியது ,
காதல் சித்தனுக்கு வராததல்ல
பித்தனுக்கு வராததல்ல ,
புத்தனுக்கும் வந்திருக்கிறது
வெந்து நொந்து நோய்வாய்ப்பட்டு தனிமையை விரும்பி போதனை செய்தானே தவிர மனித சுகத்தை அனுபவிக்காதவர் அல்ல
புத்தனின் காதல் ஞானத்தை ஊற்றி வளர்த்தது
பித்தனின் காதல் மரணத்திற்கு கூட்டி சென்றது
அமுதும் விஷமாகும் என்பது இங்குதான் வெளிப்படையானது .
கண்ணை கட்டி கண்ணாம்பூச்சியாடும் காதல் விளையாட்டில்
வரம்புகள் இல்லாமல் வரப்புகள் மீறி வாழ்நாள் முழுவதும் துடுப்பின்றி துடிக்கின்ற ஜீவன்கள் எத்தனை.

காதலில் உடல் நகராமல் மனம் நகர்கிறது
மனம் நகர்ந்து கால் நழுவுகிறது
கால் நழுவி கதை மாறுகிறது .
இதற்கு எச்சரிக்கை அடையாளம் கிடையாது ,
விதியென்று முக்காடு போட்டு முழுநாளும் புழுங்கி தவிப்பவரே
காதல் கண்களால் எடையளக்க முடியாது எடையளந்து காதலிக்க முடியாது.
காதலில் மண்டியிடக்கூடாது மண்டியிட்டால் மீண்டுவர முடியாது.
பெண்ணிடத்தில் அவள் புன்னகைக்கு மயங்கினால்
உன்னகத்தில் தன்னலத்தை விரும்புவாள்.
மூழ்கி முத்தெடுப்பவன் கடலை அறிந்தவன்
மூழ்கி தத்தளிப்பவன் வாழ்வின் வகை மறந்தவன் ,
காதல் வாழ்க்கையெனும் கடலை கடைந்தெடுக்கும் மத்து
இதில் பித்துக்கொண்டால் யாவும் பற்றறுந்து போகும்
இதில் பற்றுக்கொண்டால் தொட்டதெல்லாம் துலங்கும் .

Comments

Popular posts from this blog

எம் தேசம்

தேடுகிறேன் (ஆதவன் )

பனை