சமர்ப்பணம் ............இலட்சுமணன் பாக்கியமே

தாயே பாக்கியமே நான் பெற்ற தவமே
நாலு பிள்ளை பெற்றவளே
தவமிருந்து பெற்றதுபோல்
தத்து என்னை எடுத்தவளே
உன் முலைப்பால் குடிச்சதில்ல
உன் உயிர்கசிந்து எனை வளத்தாய்
மடியில தூங்கவச்சு
என் முடிவருடி விழிமுளிச்சாய்
எனக்கடுத்து என் தங்கை என் தாய் கருவில் உட்கார
உனக்கிருக்கு என்மடி கண்ணயர்ந்து கண்ணுறங்கு கண்மணியே என்றவளே
உன் பொழுது எனக்காச்சு
நானறிஞ்ச காலம்வரை தாயே
 உனக்காக என்னதான் செய்துவிட்டேன்
பாவிநான் என் உயிர் பிடிச்சு வெளிநாடு வந்துவிட்டேன்
பக்கமாய் நானிருந்து கடைசிவரை பாக்கலையே
சக்கரை நோய்பிடிக்க அக்கறை நான் படலயே
நீ வெளிநாடு வந்தபோதும் உனை வந்து பாக்கலையே
பெற்றபிள்ளை பேரப்பிள்ளை பத்துப்பிள்ளை இருந்தபோதும்
ஒத்தப்பிள்ளை நீயென்று சொல்லி நீ அழுகையிலே விம்மி நெஞ்சு வெடிச்சதடி
பாழாய்ப்போன அந்த நோயுந்தன் உயிர்குடிக்க
பெத்தபிள்ளை யாருமின்றி பரிதவிச்சு போனியடி
கொள்ளிபோட உரிமையில்லை
தெளிவுவிட அருகில் இல்லை பாவியடி நான்
என்னதான் அவசரமோ காலன் உனை கூட்டி சென்றான்
தாயே உன் மடியின் சூட்டினிலே சூடுகண்ட எனக்கு
என்மடியின் சூட்டினிலே நீ வந்து விளையாட
சேயாக வந்துவிடு வரும்வரை காத்திருப்பேன் வாசல்வரை பாத்திருப்பேன்
என் கவி நூலில் மாலைகட்டி
உனக்காக சாற்றி வைப்பேன்
தாயே வந்துவிடு
மறுபடியும் நீ எனக்கு தாயாக




Comments

Popular posts from this blog

எம் தேசம்

தேடுகிறேன் (ஆதவன் )

பனை