மனைவி

இறைவன் நினைத்த உறவு விதியால் கூடி முடிந்தது .
கண்டதில்லை பார்த்ததில்லை காரணம் சொல்ல தேவையில்லை காலமும் கூடிவந்து அறிமுகமாக்கியது,முடிவும் முதலும் இவள்தான் என்று திணித்தது .என் தாய்க்கொடியோடு வராத சொந்தம் என் தாரமானது .என் ஆளுமைக்கு அதிகாரமிட்டவள்,உணர்வுகளை உள்வாங்கி என் மறுபக்கமானவள் ,உதிரம் வேறு சரீரம் வேறு என் சாரீரம் ஆனவள் ,முந்தானை முடிச்சென்ற கட்டுக்குள் முழுவதையும் அடக்கி என் வழி நடப்பவள் ,எனக்காய் அழுபவள் என்னோடு சிரிப்பவள் ,ஆனந்த மழைக்குள் கூடி நனைபவள் தன் பொட்டிலும் பூவிலும் நான் வாழ நினைப்பவள் ,தாலிக்கொடி கயிற்றிலே என்னுயிரை இணைத்துக்கொள்பவள் ,கருவலி என்பது மரணத்திற்கு ஒத்திகை அதை மடியிலே தாங்கி தோளிலே சுமந்து என் தலைமுறை என்று அறிமுகம் செய்தவள் என் தாய்க்கு நான் பிள்ளை எத்தனை பத்தில் ஒன்று என கொள்பவள் தாய் தான் பெற்ற பிள்ளையில் மேலென கொள்பவள் மனைவி , மரணத்தின் பாடைதன்னில் தாய் மாரடிப்பாள் மனைவி அமங்கலி பட்டம் வாங்கி பொட்டழிப்பாள் .பிள்ளைகள் என்பது கொம்பேறும் கொடிகள் மனைவி என் விருட்சத்தின் ஆணிவேர் நான் வீழ்வதுமில்லை சாய்வதுமில்லை என் காலடி மண்ணும் காற்று எடுத்ததில்லை பேயை பெண்ணாய் நான் நினைத்ததில்லை பேயும் இறங்கும் பெண்ணில் நான் மயங்கவில்லை ,எனக்காய் அழும் என் மனைவியை என் உயிரை விற்று நான் சுமப்பேன் .

Comments

Popular posts from this blog

எம் தேசம்

தேடுகிறேன் (ஆதவன் )

பனை