மனைவி


மனைவி என்றால் என்ன?
மனை என்றால் வீடு வி என்றால் தலைவி என்பது பொருள்..
ஆதலால் வீட்டுக்கு தலைவி அவள் மனைவி என்றாச்சு.
அதே போன்று துணைவி சம்சாரி என்று பல வகையாக சொல்லிக்கொண்டு போகலாம் ஆனால் அனைத்தும் சொல்லுக்கு உகந்தாற்போல் இல்லை அப்படி இப்படி என்று சொல்வதைவிட சாதாரணமாக எடுத்து சொல்கிறேன் .
சிலருக்கு சாந்தம் என்று பெயர் இருக்கும் ஆனால் அவர்களை பார்ப்பதற்கோ பழகுவதற்கோ சங்கடமாக இருக்கும் பெயருக்கும் உருவத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாமல் இருப்பார்கள். சிலருக்கு பவித்ரா பார்வதி சீதா சாந்தி என்று பெயர் இருக்கும் உண்மையில் கை எடுத்து கும்பிட தோன்றும். ஒரு சிலர் அப்படி என்றால் மறு சிலர் இப்படியாக இருக்கும் எதையும் பெயரை வைத்து மதிப்பளிக்க முடியாது.மனைவி என்பவள் வீட்டிற்கு தலைவி அதற்காக வீட்டு பாரத்தையே தலையில் வைத்து குடும்ப வாழ்க்கையை மேற்கொள்பவள் இல்லை. கணவன் என்ற ஆளுமைக்கு கட்டுப்பட்டவள் ஆணின் பக்கசார்போடுதான் அவளின் குடும்ப மேற்பார்வை ஒத்துபோக வேண்டும் ,அதற்காக பெண் ஆணிற்கு அடிமை என்று பொருள் இல்லை. ஒரு பெண் வீட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எப்படி ஒருவரை அனுசரிக்க வேண்டும் எப்படி குடும்ப நிர்வாகத்தை கவனிக்க வேண்டும் எவ்விதம் நடந்துகொள்ள வேண்டும் எல்லாவற்றையும் எமது மூதாதையர் சொல்லியிருக்கிறார்கள் அவை அவர்களது கனவு நானும் அவர்களின் கனவினின் வழியாக வாழ நினைக்கிறேன் முடியவில்லை .
துணைவி என்பவள் வழிப்போக்கு துணையில்லை கஷ்டம் துன்பம் சந்தோசம் மகிழ்ச்சி அனைத்திலும் சரிவர பங்கெடுப்பவள் ஒரு தலைவனுக்கு மந்திரியாக இருப்பவள், ஒரு நல்ல நண்பனுக்கு நண்பியாக மனம் சோருமிடத்தில் தோளைத்தட்டி உற்சாகம் ஊட்டுபவள், மனம் தடம்புரளும் நேரத்தில் கண்டிப்பவளாகவும் இருக்க வேண்டும் ..ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு கனவு இருக்கும் எப்படியெல்லாம் வாழவேண்டும் என்று நினைக்கையிலே இல்லை நீ இப்படித்தான் வாழவேண்டும் என்று இறைவன் நினைத்துவிடுகின்றான். நாம் நினைப்பதுபோல் வாழ்க்கை அமையுமென்றால் இறைவன் என்ற சொல்லுக்கே பொருளின்றி போய்விடும் எப்படி வாழ்ந்தோம் இன்று இப்படி வாழ்கின்றோம் என்று யாவரும் நினைப்பதுதான் அதற்காக ஒன்றில் குற்றம் கண்டு அதை நோகடிப்பதில் என்ன நிகழபோகிறது? துன்பத்தை கண்டு அஞ்சி அலறுவதால் அது மறைந்து போவதில்லை எது எப்போது நடக்குமோ அது அப்போது நடந்துதான் தீரும் இது இறைவன் கட்டளை.
துன்பம், துயரம்,சந்தோசம்,வரவு செலவு யாவும் நிரந்தரமில்லை பெண் தன் கணவனை எப்படி அணுகுகிறாளோ அதன் பொருட்டுத்தான் இருவருக்கும் வாழ்வில் சந்தோசம் இருக்கும். தாய்க்குப்பின் தாரம் என்பார்கள் எதற்கு ஒருவன் தன் தாயைவிடுத்து நிம்மதி அடைவது யாரிடத்தில் மனைவியிடம்தான் அதனை மனைவி அறியாதவிடத்தில் அது விபரீதமாக மாறுகிறது. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டும் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். யாரோ எவரோ எதை எதையோ சொல்லலாம் தாய்க்குப்பின் தாரம் என்பது உண்மைதான் ஆனால் எல்லோருக்கும் நல்ல தாய் கிடைப்பதுமில்லை  அதேபோல் நல்ல மனைவியும் கிடைப்பதுமில்லை சிறுவயதில் தாய் தவறிவிட்டால் அப்பன் சித்தப்பன் என்பார்கள். எம்முன்னோர்கள் தாய்க்கு முதலிடம் கொடுத்து அதன் பின்தான் மனைவியை ஒப்பிடுகிறார் ஏன்? தாயை மனைவியை போல் விலக்கவும் முடியாது விளக்கவும் முடியாது ஆனால் அந்த தாயிலும் பெறமுடியாததை நல்ல மனைவியிடம் பெறமுடியும் அப்படிப்பட்ட மனைவி கிடைப்பவன் பாக்கியசாலி அவன் நாத்திகம் பேசலாம்.
எமது முன்னோர்கள் சொன்ன சாஸ்திர சடங்குகள் வெறும் சாக்கு போக்கல்ல அவர்கள் எங்கள் வாழ்க்கையின் வழிகாட்டிகள் தீர்க்கதரிசிகள் அவர்களின் வார்த்தைகளை சற்று நீங்கள் உற்று நோக்குங்கள் அவை உங்களின் நிலைகளை உணர்த்தும் அப்போது நீங்கள் உணர்வீர்கள் எப்போது நீங்கள் உங்கள் நிலைகளை விட்டு தள்ளப்படுகிறீர்களோ அப்போது அவைகள் உங்களுக்கு எதிரொலிக்கும். நான் சொல்லுவதும் ஒரு சிலருக்கு முழுவதும் நனைந்தபின் முக்காடு போடுவதுபோல் இருக்கும் ..சில சமயங்களில் நானே என்னை கேட்பதும் உண்டு என்ன நீ புதிதாக எழுதபோகிறாய் ஒரே மாவில்தான் அதே தோசையைத்தான் சுடபோகிறாய் என்று
புசிப்பவர்கள் ரசித்தால் அதன் வடிவங்களை மாற்றுவேன்.   ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு மூலப்பொருள் இருக்கின்றது அதன் வழிதான் அனைத்தும் உருவெடுக்கிறது அதன்படிதான் இவையாவும். எமது தமிழ் சித்தாந்த நூல்களின் மூலப்பொருள் திருக்குறள் அதன் வழித்தோன்றல்தான் அனைத்து நூல்களும் உதாரணமாக நமது அனறாட தேவைக்கு கிடைக்கின்ற தயிர் மோர் நெய் வெண்ணெய் இவை எல்லாம் பாலில் இருந்து கிடைக்கின்றது இதில் பால் மெய்ப்பொருள் அதே போன்றுதான் எமது தமிழ் சிந்தனையாளர்கள் தீர்க்கதரிசிகள் எமக்கு தந்து சென்றமை எங்கிருந்து வந்தவை திருக்குறளில் இருந்து கடைந்து எடுத்தவை .
இன்று எமது சிந்தனைக்கு விருந்தளிப்பவை.
ஏதோ தலைப்பில் ஏதோ சொல்லவந்து எதையோ சொல்லி சொல்ல வந்ததை மறந்து ஏதோ தலைப்பில் போய்க்கொண்டிருகின்றேன் என்ன செய்வது ஒவ்வொருவரும் ஏதோ ஒரு சிந்தனையில்தான் வருகிறார்கள் ஆனால் விதி சிலசமயத்தில் எங்களை மாற்றிவிடுகின்றது போவது போகட்டும் வருவதை பார்த்துகொள்வோம். மனைவி ஒரு மாணிக்கம் குத்துவிளக்கு குலவிளக்கு என்று சொல்வார்கள் உண்மைதான் திக்கற்ற குடும்பத்தில் ஒரு நல்ல மருமகள் கிடைத்துவிட்டால் அவள் அனைத்தையும் மாற்றிவிடுகிறாள் இருள் சூழ்ந்த இடத்தில் ஒரு தீக்குச்சியை போன்ற ஒளி கிடைத்தால் அந்த இடத்திலிருந்து இருள் அகன்று விடுகிறது மனைவியானவளும் அப்படித்தான் அமையவேண்டும். ஒரு குடும்ப விருத்திக்கு கணவன் மனைவி இருவரும் ஒழுங்காக இருந்தால்தான் அவர்களின் எதிர்காலமும் ஒழுங்காக இருக்கும் ஏரில் பூட்டப்பட்ட மாடுகள்போன்று இருக்கவேண்டும் சாரியான ஜோடிகள் ஒன்றாக பூட்டப்பட வேண்டும் கட்டையும் குட்டயுமாக இருந்தால் ஒடுபவனும் கஷ்டப்படவேண்டும் ஓட்டுபவனும் கஷ்டப்படவேண்டும் ஓட்டுபவன் என்று நான் சொல்வது இறைவன் அவன் எமக்கு என்று ஓரிடத்தை நிர்ணயித்து இருப்பான் நாம் அந்த இடத்தை சென்று சேரும்வரை கஸ்டதுன்பங்களை தந்துதான் அந்த இடத்திற்கு உன்னை கூட்டி செல்வான் .ஓட்டுபவன் ஏன் கஷ்டப்படவேண்டும் எப்படி கஷ்டப்படுவான் என்றால் ஏர் நுகத்தில் பூட்டப்படும் மாடுகள் ஒன்று உயரமாகவும் மற்றொன்று குள்ளமாகவும் இருந்தால் சுமை ஏற்றி செல்லும்போது இரண்டில் ஏதோ ஒன்று சமமான எடை இல்லாமல் தள்ளாடுகிறது அதே சமயம் மற்றையது சோர்வடைகிறது இது ஓர் விதமான பின்னடைவு ஆனால் இரண்டும் ஒரேமாதிரியாக இருந்தால் ஏற்றி செல்வதிலோ அதிக பயணத்திலோ சவாரி செய்வதிலோ எந்தவித கஷ்டமும் கிடையாது இதே போன்றுதான் மனைவியும் நல்லவளாகவும் தாய்மைத்தன்மை உள்ளவளாகவும் கிடைத்தால் வாழ்வில் வேறொன்றும் வேண்டாம் ..அதைத்தான் “மனைவி அமைவது இறைவன் கொடுத்தவரம்” என்பார்கள். “நிலம் பார்த்து பயிரிடு தரம் பார்த்து அளவிடு” என்பது முன்னோர்கள் வாக்கு அவர்களது வார்த்தைகளும் சிந்தனைகளும் சாதாரணமல்ல எத்தனையோ அனுபவங்களை சந்தித்தவர்கள் எல்லா பாடுகளிலும் பட்டு தெளிந்தவர்கள் எதற்காக திருமணத்தை குலம் பார்த்து குணம் பார்த்து பெரியோர்களால் நிச்சயம் செய்கிறார்கள் ஒரு நல்ல குடும்ப துணையாள் அல்லது துணையான் வாழ்நாள் முழுவதும் கூடவே வரவேண்டும் என்பதற்காக மட்டுமின்றி அவள் சகல விதத்திலும் கணவனுக்கும் குடும்பத்தில் அனைவருக்கும் விளக்காய் இருக்க வேண்டும் என்பதற்காய் பெரும்பாலும் பெரியோர்கள் நிச்சயிப்பது சறுக்குவதில்லை ஆனால் மற்றயவை பிழை என்று சொல்லவில்லை பெரியோர்கள் நிச்சயிப்பது தொண்ணூறு வீதம் சரியென்றால் பத்துவீதம் துரதிஸ்டமாக மாறுவதுண்டு பெரியோர்கள் நிச்சயத்தில் விருப்பு வெறுப்பு எல்லாவற்றையும் மூட்டைகட்டி வைத்துவிட்டு அவர்களின் சந்தோசத்திற்காக இருந்தாலும் அதில் வரும் கஷ்ட துன்பங்களில் அவர்கள் பங்கெடுக்கிறார்கள் வாழ்க்கையில் சந்தோசமில்லை என்று சொல்லமுடியாது ஏனென்றால் எல்லோருடைய ஆசிர்வாதமும் கிடைக்கின்றது உன் முயற்சிகளுக்கும் உறுதுணை கிடைக்கிறது ஆதலால் காதலித்து உறவினரை வெறுத்து காதலன் காதலி என்று உடல் இரண்டு உயிர் ஒன்று என வாழ்பவர்கள் எதையும் இழந்துவிடவில்லை அவர்கள் தம் வாழ்வில் திடமான வாழ்க்கை பயணம் இருந்தால், ஒழிவில்லாத ஒற்றுமை இருந்தால், பகுத்தறியும் பக்குவம் இருந்தால் எதிலும் சிந்தித்து செயற்பட்டால், பெரியவர்கள் ஆசிர்வாதம் எதற்கு ....ஆண்டவன் வந்து விருந்துண்டுபோவான் நூற்றுக்கு ஒருசிலர் வாழ்க்கை திசைமாறி போகலாம் ஏன் கண்ணீரும் விம்மலுமாய் இருக்கலாம் அவர்தம் தலையெழுத்தல்ல. வாழ்க்கை என்பது நாம் பயணிக்கும் வண்டி அதற்கு கடிவாளம் இல்லையேல் அது குடை சாயும். விதியுமில்லை சதியுமில்லை உன் வாழ்க்கை என்பது உன் கையில் ஏனென்றால் நானும் காதலித்து கைபிடித்தவன்.
ஒரு சிலர் அழகு நிறம் பணம் வசதி என்பவற்றை பார்த்து ஏதோ ஒருவனையோ ஒருத்தியையோ கணவன் மனைவியாக தெரிவு செய்வார்கள் அதற்குள் எங்கு சந்தோசம் வரப்போகிறது நீ அழகு பார்த்து திருமணம் செய்வாய் என்றால் உன் நிம்மதி போய்விடும்  எப்படியென்றால் உன்னை மிஞ்சும் அழகன் அல்லது அழகி உங்களை சந்தித்துகொள்ளும் நிலை தோன்றும்போது யாரை யார் நோக்குகிறார்கள் எவரின்பால் அவர்தம் சிந்தனை முளைவிடுகிறது என்ற கேவலமான மன ஏற்றத்தாழ்வுகள் மூலம் வாழ்க்கையில் சந்தேக கேள்விகள் சந்தோஷ கிளைகளை ஒடிக்கும். ...அடுத்தாற்போல் நிறம் வாய்த்தகராறு மூலம் அத்துமீறும்போது நிறத்தை சொல்லி பேசுவதுமுண்டு அதனூடாக தத்தம் குடும்பங்களின் உயர்வுகள் தாழ்வுகள் பரிமாறப்படும் ஊர் கைகொட்டி சிரிக்கும் நிலைக்கு அவர்தம் பேச்சின் ஆழம் இருக்கும். .இவ்வகையான நிலை கீழ்மட்ட வர்க்கத்தை சேர்ந்தவர்க்கிடையே காணப்படும் ..அடுத்தாற்போல் பணம் பணம் பாதாளம்வரை பாயுமென்பார்கள் அது பாயுதோ பறக்குதோ உண்மையில்லை உன் நிம்மதியை குலைக்கும் என்பதே உண்மை பணம் இருப்பவனிடத்தில் மதியிருப்பதில்லை மதியிருப்பவன் உன்னை அணைப்பது உன் அன்புக்கல்ல உன்னை அப்புறப்படுத்த பணத்திற்காகவும் வசதிக்காகவும் உன்னில் ஆசைப்படுபவர் உன் பணத்திற்கும் வசதிக்கும் ஆசைப்பட்டால் உன் வாழ்வு சோகத்தில்தான் ...அதேபோல் வசதியால் வாழத்தேரியாதோர் வாயைக்கட்டி வயிற்றைகட்டி வட்டிதொட்டி பரண்கள் கட்டி வசதியாய் வாழ்ந்து நீ வாழ வசதியாய் விட்டு சென்ற சொத்து உன்னால் மேற்பார்வை இல்லை அதை மேய்ப்பவரும் இல்லை என்று உன்னை மேய்த்துக்கட்ட பட்டத்துராஜா நீ பக்கத்து ராணியாய் வந்தவள் பக்கத்தில் வைத்து உன்னை முட்டாள் என்று அழைப்பார். ஒரு உண்மையான அன்பை விட்டுவிட்டு போலியான அன்பிற்கு கேலியாக வாழ ஆசைப்படுபவன் எப்போதும் வாழ்க்கையில் நிம்மதி அடைய மாட்டான் ஒரு சூனிய சுபாவம் சூழ்ந்திருக்கும் பணம் வசதி அழகு என்பவற்றை கருவாககொண்டு மனைவியைதேடுபவன் வாழ்நாளை தொலைத்து பின்னால் வசந்தத்தை தேடுவான். எதையுமே நீ உன் அறிவால் தேடு உன் மனதை கேட்டு ஆயிரம் இருந்தும் என்ன நல்ல மனைவி இல்லையென்றால் சாதாரணமாக ஒரு ஓட்ட பந்தய வீரனுக்கோ அல்லது ஒரு பரீட்சைக்கு தயாராகிறவனுக்கோ யாராவது ஒருவர் பக்கமிருந்து உற்சாகப்படுத்தும்போது அவனது வேகமும் விவேகமும் பெறுபேறுமும் இரட்டிப்படைகிறது அதே போன்றுதான் கணவன் மனைவிக்குள் இருக்கவேண்டிய உடன்படிக்கைகளும் ஒருதரை ஒருதர் நேசிக்கவேண்டும் உற்சாகப்படுத்தவேண்டும்,தம்மை தாமே திடம்படுத்தி  கொள்ளவேண்டும் ...இன்றும் சிலர் பெண்களை வீட்டு பணிப்பெண்களாகத்தான்  பார்க்கிறார்கள் அவர்களில் சிலரை நேரடியாக பார்த்திருக்கின்றேன் வீட்டில் மனைவி காலையில் எழுந்து அந்தி ஊரடங்கும் வரைக்கும் அவள் கைகால் ஓய்வதில்லை இருந்தும் அவள் கடனோ தீராத சலிப்பில் மறுநாள் காலையை மணிவைத்து காத்திருப்பாள் அவள் நோக்கமோ கணவன் பிள்ளைகள் உற்சாகமாகவும் சந்தோசமாகவும் தான் சமைத்த உணவை சாப்பிடும்போது மிகவும்சந்தோசமடைகிறாள் அத்தோடு அவர்களில் ஒருவர் கணவனோ பிள்ளைகளோ சாப்பாட்டிற்காகவோ அவர்களுடைய பணிவிடைகளுக்காகவோ நன்றி சொல்லி பக்கத்திலிருந்து ஓரிரு வார்த்தை மனம்விட்டு பேசும்போது அவள் வேதனைகள் மறைந்துபோகும். ஆனால் அந்நிலையில் வாழ்பவர்கள் அரிது மேலைத்தேய நாடுகளில் இயந்திர வாழ்க்கையின் மத்தியில் ஒரு சில பெண்கள் தம் நாட்டு வழக்கப்படிதான் அன்றாடம் வாழ்கின்றனர் அவர்களில் மிகவும் கெட்டித்தனமானவர்கள் தமது வெளிவேலைகளிலும் கண்ணும் கருத்துமாய் இருந்துகொண்டு தமது குடும்ப காரியங்களிலும் அகோரமாக ஈடுபடுகிறார்கள் காரணம் என்ன ..............வாழ்க்கை செலவீனங்கள் நாளுக்குநாள்  இரட்டிப்படைகிறது. கணவன் ஒருவனின்  வருவாய்க்கும் இன்றைய விஞ்ஞான வாழ்க்கை முறைக்கும் ஈடுகொடுக்க கூடிய நிலையில் இல்லை இன்றைய வாழ்வியல் பொருளாதாரம் ஆகையால் மனைவியானவள் தனது பிள்ளை சந்ததியினரின் வருங்காலத்தையும் கணவனுக்கு குடும்ப பாரத்தை கொஞ்சம் குறைத்து கொள்ளும் மன ஆறுதலில் தானும் கணவனுக்கு நிகராக நடந்து கொள்கிறாள் அதேபோன்று கணவனும் மனைவியும் நிலைமையும் புரிந்து ஒருத்தருக்கு ஒருதர் ஒத்துறவானால் வாழ்க்கையில் எந்தவித சச்சரவுமின்ரி எதையும் தாண்டி போகலாம் இதையே உங்கள் பிள்ளைகள் தங்கள் வாழ்க்கை அணுகுமுறைக்கு கற்றுக்கொள்ளும் அடிப்படை பாடம். கணவன் மனைவிக்குள் முரண்பட்டு இல்லாதவர்கள் எவருமில்லை அதனை பிள்ளைகளுக்கு முன்பாக விவாதமாக எடுத்துக் கொள்ளாதீர்கள் அதுவே பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையிலான விரிசல்களை உண்டுபண்ணும் அதிஸ்டம் நேரம் நாள் என்பது வெறும் சாக்குபோக்கு விதி என்பது முட்டாள்த்தனம் “எட்டாத பழம் புளிக்கும்” என்பது போல் எமது முயற்சிகளை முடக்கிவிட்டு அதற்கு வேறு ஒரு காரணம் சொல்வதுதான் அதிஸ்டம் ...உங்களை நீங்கள் ஏய்த்துகொள்ளதீர்கள் அதன் சலிப்பு உங்களை தேடும் அன்பும் பாசமும் நிறைந்து இருக்கவேண்டும் என்பது உண்மை அதில் வம்புகள் பூத்து வீம்பிளுக்கும் கடிவாளப்படுத்தி பண்புக்குள் அடக்கு மோகம் தாபம் கூடலாம் கோபம் கோரமாய்  சிதைவுற்று வாழ்வை சின்னாபின்னாப்படுத்தும். சிந்தித்து செயற்படு அன்புக்குள் மூழ்கினால் காளைக்கும் மடியஇறக்கி பால் கறந்து வர சொல்லி உன்னை அனுப்புவார் .....ஒருவன் தன் மனைவியை அன்பால் பூசிப்பவன் ஆசையால் தூளி கட்டுபவன் திடீரென இடியாய் முழங்குகிறான் என்றால் அவள் எவ்விதமான கொடூரமான செயலையோ அவனுடைய எதிர்பார்ப்பையோ எவ்வண்ணம் அவள் அலட்சியம் செய்கின்றாலோ அல்லது நம்பிக்கைக்கு தீங்கு செய்த்திருக்கின்றால் என்பதை சொல்ல முடியும் ....வட துருவம் தென் துருவம் என்றும் ஒத்துவராதோ  அதே போன்றுதான் கணவன் வார்த்தைக்கு செவிகொடாதா மனைவியும் மனைவி வார்த்தைக்கு செவிகொடாத கணவனும் எதிரும் புதிருமாக இருப்பார்கள் இவர்களின் நிறையும் குறையும் மேலோங்கி காணப்படும் விதாண்டாவாதம் பேசப்படும் குடும்பத்தார் இழிவுநிலை பேசப்படும் வாழ்க்கையே வீணான விடயம் என தென்படும்...இதுவே வாழ்நாள் முழுவதும் சந்தோசத்திற்கு இழுக்கை கொண்டு வரும் இதே துரதிஸ்ட விதமாய் இருவருக்கும் பிள்ளைகள் இருந்துவிட்டால் இவர்களின் பாதிப்பைவிட பிள்ளைகள் மனநிலை மோசமாக பாதிப்படைகிறது இவை ஏன் உருவாகிறது எதிர்பார்ப்புக்கள் சந்தோசங்கள் அதிகமாக மழுங்கடிக்கப்படுமிடத்தில் இத்தகைய பிரச்சனைகள் தோற்றுவிக்கப்படும் ...சஞ்சலங்கள் வருமிடத்து சங்கடம் வரும் வார்த்தைகளை வரிக்கிரமம் பண்ணு வசதிக்கே வாயாடாதே ..வருவாய் மட்டும் வாழ்க்கையில்லை வளமுடன் வாழ வசதியை அளவுபடுத்து நிம்மதியும் நித்திரையும் பக்கத்திலிருக்கும் நிம்மதி எங்கு தொலைகிறது யார் தொலைக்கின்றார் எல்லாவற்றிற்கும் பெண்தான் காரணம் செய்வதை செய்துவிட்டு பெண்ணில் சாடுவதில் என்ன நியாயம் உன் சுயநிலை எங்கே உன் ஆண்மை எங்கே எங்கே விதையுண்டாய் அவள் முளைவிட முளைவிட்ட இடத்தில் அவள் கொடிவிட்டால் அதில் நான் மறையுண்டேன் விண்ணவரும் மன்னவரும் மயங்குமிடத்தில் இடையன் நான் மயங்குவதில்  என்ன உண்டு.
மந்திரித்தால் மயங்கிவிட்டேன் வஞ்சரித்தால் வாடிவிட்டேன் எதை எங்கு வைத்தால் எவை பலன் கொடுக்கும் என்பதை புரிந்துகொள் மாணவி என்பவள் உடலில் பாதிபோல் ஆனால் தலை முடியில் முடியாதே ........உன் விதியின் முடிவை மாற்றும் குருவிச்சம் செடி உள்ளது அது எப்போதும் பெரும்மரங்களின் கிளைகளில்தான் முளைவிடும் அந்த பெருமரத்தின் சிறப்பே அழித்துவிடும் பழம்பெரும் மரமாக  இருப்பினும் அது அன்றோடு சினைப்பைட்டு அதன் வகை கெடும் அதேபோல் பெருமையோடு இருக்கின்றவரும் சிறு அற்பத்திற்கு  ஆசைப்பட்டு பெண்ணை தலைமேல் வைத்து  சீரழிபவன் சில வகைப்பட்ட பெண்ணால்... மண்ணுக்கு ஒப்பிடும் பெண்ணை வஞ்சித்து பேசுவதும் முறையோ பெண்ணைதொட்டுத்தான்  முதலும் முடிவும் முதலே முதேசியானால் முடிவு எப்படி இருக்கும் தாயும் நல்ல தாரமும் பெண்தான் அதற்காய் எல்லாவற்றையும் ஒன்றாய் இணைக்கவில்லை. ஆசைகளை தேக்கி கனவு காண்பவர் வாழ்வு அது கனவுதான் நிகழ்வில் வாழ முடியாது “எண்ணத்தில் கோட்டைகட்டி  வண்ணமாய் தோரணம் தொங்கவைத்து  வாசலில் இரு மருங்கும் கன்னிகைகள் பன்னீர்தூவி மயிலிறகால் சாமரம் வீச வெண்புரவி புயத்தேறி அந்தி சாயும்  மங்கற்பொழுதில்  சிட்டுக்குருவுகள் சிறகுலர்த்தி சினப்படும் சோலையில் பட்டாம்பூச்சி பூவிதழ் மிதித்து தேன் குடிக்கும் வேளையில்  விண்ணவரும் வந்துலாவும் பழமுதிர்ச்சோலையில்  என்னருகில் அவள் இருக்க அவள் இதழில் தேன் குடிக்க வையகமே இருண்டதென நான் மயங்க அச்சச்சோ சொல்லால் சொல்ல ஒரு வார்த்தை  இல்லை” அதுபோல் சொல்லி நான் மனம் உறைய ஏன் வார்த்தைகளுக்கு வலுவில்லை கண்டது கண்களின் காட்சியில்லை கற்பனையின் தூறளிது வாழ்க்கையில் எதையும் எதிர்பார்த்து காத்திரு கிடைப்பது எதுவானாலும் விதிப்படி என்று ஏற்றுக்கொள் ....தானம் தர்மம் தழைத்தோங்கும்  உன்பால் என்றால் யாவும் மிளிர வழி செய் தர்மம் தலைகாக்கும் கண்ணில் ஒத்திக்கொள்ளும் காலமிது இல்லை கடுகதி வேகத்தில் சகலதும் மாயமிங்கு வேரூன்றா செடிகளும்  பூ முளைக்கும் புருவம் அசைக்கும் இடைவெளியில் பூகம்பமும் நிகழும் பொல்லாப்பு நிறைந்த உலகமிது. மனம் ஒரு மந்தி அந்தியில் குந்தி கொப்புடைத்து போகும் எவனோ அல்லது எவளோ ஒரு நிலைப்டாய் நிலைத்திருக்கிறானா எவை எவருக்கு சொந்தம் என்று சொல்வது அனைத்தும் காலத்திற்கு காலம் மாறுபடுகிறது எதையும் நிலையானது என்று எவராலும் உறுதிபட சொல்ல முடியாது ஏனென்றால் இன்றைய காலம் இயற்கைக்கு முரணானது அதன் எதிரொலியாக மனித வாழ்க்கையை அது மாற்றியமைத்து விடுகிறது ,,,தேவைகளின் பொருட்டு இக்காலம் நகர்ந்து கொண்டிருக்கிறது ஒருத்தன் தனக்கு ஒன்றிலிருந்து ஆதாயம் கிடைக்குமானால் அதை அவன் அவன் தொடர்வான் இல்லையேல் நாட்டம் கொள்ளான் ..............இவற்றுக்கெல்லாம் காரணம் என்ன ....மனம் என்ன விடயமாக கொண்டாலும்சரி தாவாத மனம் பாராத குணம் கேளாத நிலையில்லை அனைத்தும் அவ்வண்ணம் மாறுபடுகிறது ,,இவை சாதாரண மனித வாழ்க்கையில் காணக்கூடியதாக இருக்கும் தாவுகின்ற மனம் எப்படிப்பட்டது என்று பார்க்கும்போது எம்மிடம் இருக்கும் பொருட்களோ அல்லது எமக்கென்று உரிமை கொள்ளகூடிய ஒன்று எமக்காக பக்குவமாகவும் பாதிப்பில்லாமலும்  கூடியகாலம் வாழக்கூடியதாகவும் இருக்கும் ஒன்றை நாம் அதன் உறுதிப்பாட்டை  அறியாமல் வேறு ஒருவர் வேறொன்றை பற்றி வேறுவிதமாக சொல்லும்போது நாமும் அதன்மேல் மோகம் கொள்கின்றோம் ..இது மண்ணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி சில சமயம் மனம் சற்று சஞ்சலப்படுகிறது இதை எவரும் மறுக்க முடியாத உண்மை  இது நீ  நான்  மட்டுமில்லை.இந்த உலகில் பிறந்த மனித ஜீவன் அனைத்திற்கும் ஒன்றான இயல்பு. எவன் மனத்தில்  இச்சைகளுக்கு இடமில்லையோ அவன் ஞானிகளில் ஒருவன் ஞானம் அவனை எவ்வாறு தொடுகிறது இச்சை என்னும் கொடூரப்புயல் முட்டி மோதி இன்னல்பட்டு அதன் மூலம் ஞானம் என்பது முளைவிடுகிறது ..............ஞானம் என்பது வாழ்வியல் ஞானம் வேறு தெய்வீக ஞானம் வேறு தெய்வீக ஞானம் தீர்ர்க்கதரிசனம் இசை பாடல் கலை நேர்மை சத்தியம் என்பது வாழ்வியல் ஞானம் என்பது வாழ்ககயின் தத்துவம் போராட்டத்தின் வெறி இன்னல்கள் தியாகங்கள் அர்ப்பணிப்பு போன்றவற்றின் மூலம் உருப்பெறுவதுதான் வாழ்வியல் ஞானம் இச்சை எனபது ஞானத்தை  மளுங்கடிப்பது கொள்கைக்கு குழிதோண்டுவதும்தான் ..இச்சை பெண் பொன் மண் இந்த மூன்றுவகையான இச்சைகளும் மனிதனை மண்ணோடு மண்ணாக்கி விடுகிறது இது வரலாற்று கதைகளில் இருந்து எம் வாழ்வியல் வரைக்கும் எவராலும் மறுக்க முடியாத உண்மை .....ஒருத்தருடைய ஆசைகளும் எண்ணங்களும் மழுங்கடிக்கப்படும்  அல்லது அவை பூர்த்தி செய்யப்பைடாதவிடத்து மோகங்களும் தாபங்களும் எஞ்சி இச்சையாகிறது அவை மனம் என்னும் கட்டுகோப்பை தாண்டி மனசாட்சிக்கு விரோதமான செயல்களில் மண்டியிட்டு கிடக்கிறது ஒரு குடும்ப வாழ்கையில் கணவன் மனைவிக்குள் இருக்கக்கூடிய  அந்தரங்கங்கள்  உணர்ச்சிபூர்வமாக இல்லாதவிடத்தில் மனம் சலிப்படைகிறது அதன்  இச்சையின் காரணமாக பிளவுகளும் பிரிவுகளும் தொடர்கிறது எத்தனையோ பிரச்சனைகளின்  மத்தியில் எத்தனையோ சவால்களையும் சந்தித்து அனைத்தையும் திறம்படுத்து  மனிதர்கள் எத்தனையோ அத்தனை  பேரும் பெண்ணை மதுவாய் மாறுபட்ட கிண்ணத்தில் வைத்து ருசிக்கிறார்கள் இது உடலுணர்வு ரீதியான பிரச்சனையாகவே  வைத்துக்கொள்ள வேண்டும் ..இவை கணவன் மனைவிக்குள் தீர்க்கப்பட வேண்டியவை இது மனம் மூளை என்பவற்றிற்கு அப்பால்பட்டது ..இவ்வகையான செயல்முறைகள் பிழை என்பது மூளைக்கு தெரியும் அவைகள் கண்டித்து சொல்ல இச்சைகள் இடம் கொடுப்பதில்லை இச்சைகளின் இறுமாப்புக்கள் அடங்கும்போதுதான் மன சாட்சியும் மூளையும் வாதிட்டுக்கொள்கிறது கண்களை மேயவிட்டு எண்ணங்களை புதைப்பது அதில் முளைப்பது விபரீதம் மனசாட்சியை முன்னிறுத்தி உணர்வுகளை கட்டுபடுத்துங்கள் வசந்தம் உங்கள் வாசல் தேடி வரும் ....

Comments

Popular posts from this blog

எம் தேசம்

தேடுகிறேன் (ஆதவன் )

பனை